சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.
நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் திரை உலகில் வருவதற்கு முன்பாகவே தெலுங்கில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் கதாநாயகியாகவும் சில திரைப்படத்தில் நடித்த நமது நடிகைக்கு அங்கு சரியான மார்க்கெட் இல்லை.
இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வந்த நமது நடிகைக்கு சரியான கதையம்சம் கொண்ட திரைப்படம் கிடைக்காத காரணத்தால் தொடர்ந்து படுதோல்வியைச் சந்தித்தார்.
தற்போது மூன்று வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்த நடிகை ஸ்ரீதிவ்யா தற்சமயம் பிரபல வாரிசு நடிகருடன் ஒரு திரைப்படத்தில் ஜோடி போட்டு நடிக்க உள்ளார் அவர் வேறு யாரும் இல்லை கௌதம் கார்த்திக் தான் இவர்களை வைத்து பத்ரி வெங்கடேஷ் தான் திரைப்படம் இயக்கப் போகிறாராம்.
ஆனால் கௌதம் கார்த்திக் இதற்கு முன்பாக இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஒரு அடல்ட் திரைப்படம் என்ற காரணத்தின் மூலமாக ரசிகர்களிடம் வெறுப்பை மட்டுமே சம்பாதித்துள்ளார். இன்நிலையில் ஸ்ரீதிவ்யா இவருடன் நடிக்க போவதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
மேலும் இது போன்ற செய்திகளை படிக்க நமது இணையத்தை பின் தொடரவும்.