நடிகை அம்ரிதா அய்யர் தமிழ் சினிமாவில் தெனாலிராமன், லிங்கா, போக்கிரி ராஜா, தெறி ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு படைவீரன் காளி படங்களிலும் அவர் நடித்து இருக்கின்றார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கின்றார். பிகில் படத்தின் மூலம் தென்றல் என்ற கேரக்டரில் நடித்தவர் அமிர்தா ஐயர்.

இந்தப் படத்தில் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளார்.தெத்துப்பல் அழகு என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அமிர்தா அவ்வப்போது இணையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக ஹாரர் திரில்லர் படமான லிஃப்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி வைரலாகின.நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்திற்கு பிறகு கவினுக்கு கிடைத்துள்ள மற்றொரு வாய்ப்பு இது.

பெங்களூரில் பிறந்து வந்த அம்ரிதா அய்யர் மலையாளத்தில் வெளியான பத்மவியூகம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தெனாலி ராமன், போக்கிரி ராஜா, தெறி உள்ளிட்ட படங்களில் சைடு ரோலில் நடித்து வந்த அம்ரிதா அய்யருக்கு விஜய் ஜேசுதாஸ் படைவீரன் படத்தில் நாயகி ரோல் கிடைத்தது.

மல்டி ஹீரோயின் சப்ஜெக்டாக வெளியான விஜய் ஆண்டனியின் காளி படத்திலும் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய வீடியோக்களை புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது உடை மாற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஓ..குறளி வித்தையா..?என்று நக்கலடித்து வருகிறார்கள்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here