தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படும் பிரச்னைகளில் ஒன்று Chennai Talk யூடியூப் சேனல் பிரச்சனை.

சமீப நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவரிடம் ஆசாபமாக பேசி, பேட்டி எடுத்து அதனை Chennai Talk என்ற யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய சென்னை டாக் யூடியூப் சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொது இடங்களில் ஆபாசமாக பேசி, அதுபோன்று பேட்டி எடுத்து ஒளிபரப்பிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது இதுபோன்று பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து அதனை யூடியூப் சேனலில் ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, ”யுடியூப் சேனல்களில் ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில், பதிவு செய்த வீடியோக்களை நீக்க வேண்டும். அப்படியில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போல யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here