“உலக அழகி நான் தான்” இந்த பாடலை எந்த ஒரு 90ஸ் கிட்ஸும் மறந்து இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு செம்ம பேமஸான பாடல். இந்த பாடலில் நடித்து அசத்தியவர் கார்திகா, இவர் இதை தொடர்ந்து ராமன் தேடிய சீதை படத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து இவர் பல வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகின்றாராம்.

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘தூத்துக்குடி’ சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான கார்த்திகா மற்றும் சுவேதா நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘கருவாபையா’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி படு ஹிட் அடைந்தது. மேலும், கார்த்திகா நடித்த ‘பிறப்பு’ படத்தில் இடம்பெற்ற உலக அழகி நான் தான் என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது.

1991 ஆம் ஆண்டு திருக்கடையூர் என்ற ஊரில் பிறந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார் அதன் பின்னர் ஆடிஷன் மூலம் இவருக்கு தூத்துக்குடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் தூத்துக்குடி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப்படத்திற்கு பிறகு ‘தூத்துக்குடி கார்த்திகா’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.

குறிப்பாக அந்தப்படத்தின் ‘கருவாப்பையா’ என்கிற பாடலை கேட்கும்போதே, இப்போதும் கார்த்திகாவின் முகம் தான் ஞாபகத்துக்கு வரும். தூத்துக்குடி படத்திற்கு பின்னர், பிறப்பு, நாளைய பொழுது உன்னோடு, ராமன் தேடிய சீதை, மதுரை சம்பவம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. இடையில் சில நாட்கள் திரையுலகை விட்டு ஒதுங்கி மும்பை சென்றுவிட்ட கார்த்திகா, தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்ய இருக்கிறார்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here