பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அடுத்த, களரம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற முதியவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த தனது தந்தையின் உடலை அவரது மகன் பாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு அருகிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் ராமசாமியின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும், வீட்டிற்கு அருகில் அடக்கம் செய்யக்கூடாது என அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த பகுதி மக்களுக்கு தெரியாமல் இறந்து போன தனது தந்தையின் உடலை பாலகிருஷ்ணன் தந்து வீட்டின் ஒரு அறைக்குள் சடலத்தின் மீது திருநீறை பூசி அடக்கம் செய்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல கிருஷ்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது தந்தையின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்காத பாலகிருஷ்ணன் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், போலீசார் பாலகிருஷ்ணாவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றி பின்னர் உடலை கைப்பற்றி மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

தனது தந்தையின் கோரிக்கைப்படி அவரது உடலை வீட்டிலேயே அடக்கம் செய்ததாக பாலகிருஷ்ணா போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here