நடிகர் வடிவேல் பாலாஜி மரணமடைந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சின்னத்திரை நடிகரான வடிவேல் பாலாஜி கலக்கப்போவது யாரு, அது இது எது, ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வைகைப் புயல் வடிவேல் போன்ற உடல் மொழியில் ரசிகர்ளை கவர்ந்த வடிவேல் பாலாஜி, பெண் கெட்டப்புகளிலும் கலக்கியிருக்கிறார்.

கடந்த 2 வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

View this post on Instagram

💔💔 @mokkastudentu

A post shared by Yogi babu (@actor.yogibabu) on

இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜி வெளியிட்ட அவரது வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதில் பகவத் கீதை இடம்பெற்றுள்ள எதை நீ கொண்டு வந்தாய் கொண்டு செல்வதற்கு என்று கூறி இதுதான் உண்மை வரும்போது என்ன எதை எடுத்து வந்தோம் போகும் போது எடுத்து செல்வதற்கு?

பிறப்பு இறப்பு நடுவுல கொஞ்சம் கேப்.. அந்த கேப்புல சந்தோஷமா இருங்க.. அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாருங்க.. இதுல என்ன நீ பெரிய ஆளு, நான் பெரிய ஆளு.. என தனக்கே உரிய புன்னகையில் பேசி முடித்திருக்கிறார் வடிவேல் பாலாஜி.

மற்றொரு காட்சியில் தனது கெட்டப்பினை மாற்றி மேக்கப் செய்துகொண்டு கண்ணீர் சிந்தியுள்ள காட்சியும் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here