தமிழ், மலையாள சினிமா ரசிகர்கள் பாகுபாடில்லாமல் ஒரு நடிகையை கொண்டாடுகிறார்கள் என்றால் அது நஸ்ரியா நசீம் தான். மற்ற நடிகைகளுக்கு இருந்தாலும் இவருக்கு ஹேட்டர்ஸ் இல்லை என்றே சொல்லலாம்.

கவர்ச்சி காட்டாமல் தனது முக பாவனைகளாலே மொத்த ரசிகர் கூட்டத்தையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார். சிறுவயதில் சூப்பர் சிங்கர் மாதிரியான போட்டியில் கலந்துகொண்டு பின் நடிப்புக்கு வந்தவர், பெரும்பாலும் நடித்தது மலையாள சினிமாதான்.

இதுவரை தமிழில் ஐந்துக்கும் குறைவான படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் மவுசு குறையாமல் டாப்பில் இருக்கிறார்.பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்ட பின் நடிப்பிற்கு கொஞ்சம் பூட்டு போட்டவர், அதன்பின் பகத் பாசிலுடன் ட்ரான்ஸ் படம் உட்பட ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார்.

மீண்டும் எப்போது நடிக்க வருவார், தரிசனம் தருவார் என ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஆனாலும் ரசிகர்களை ஏமாற்றாமல் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னை பற்றி அப்டேட் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

தற்போது வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படத்தில், அதே அழகில் மின்னுகிறார். இதை பார்த்த ரசிகர்கள், “தலைவி எப்போதும் டபுள் டோஸ் பியூட்டி க்யூட்டி” என முத்தங்களை பறக்கவிடுகின்றனர்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here