பேஸ்புக் மூலம் நட்பாக பழகி இளவயது சிறுமிகளை ஏமாற்றி வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயமானார்.

ஊரடங்கு நேரத்தில் எங்கே சென்றார் என பதறியபடி பெற்றோர்கள் தேட, எங்கும் கிடைக்காததால் பொலிசில் புகார் அளித்தனர்.

மாணவியின் செல்போன் எண்ணைக் கொண்டு பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், பொள்ளாச்சி, நத்தம், திண்டுக்கல், பழனி என ஒவ்வொரு ஊராக காட்டியது.

சில மணிநேரங்களிலேயே சுவிட்ச் ஆப்பும் செய்யப்பட்டு விட்டது, கடைசியாக திண்டுக்கல்லின் பேருந்து நிலையம் அருகே சிக்னல் நின்றதால் அங்கு சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஊரடங்கை மீறியும் ரகசியமாக செயல்பட்டு வந்த சுகன்யா தங்கும் விடுதியில் பொலிசார் சோதனையிட்டனர்.

அங்கே அறையில், முகமது ஷபீன் என்ற இளைஞருடன் குறித்த சிறுமி தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவனை பிடித்து விசாரித்ததில் உண்மைகள் தெரியவந்தன, பேஸ்புக் மூலம் நண்பனாக பழகிய முகமது ஷபீனுடன் தொடர்ந்து சிறுமி பேசி வந்துள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக சிறுமியை காதல் வலையில் வீசிய ஷபீன், ஆசையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

ஒருநாள் சிறுமியை நேரில் பார்க்க வேண்டுமென வரச்சொல்லியுள்ளான், அப்படியே பைக்கில் சுற்ற வேண்டுமென கூற சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

சிறுமியை ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு மாவட்டமாக இ- பாஸ் இல்லாமல் ஊருக்குள் இருக்கும் குறுக்குப் பாதைவழியாக சுதந்திரமாக சுற்றியுள்ளான்.

இரவுக்குள் வீட்டில் கொண்டு விடுவதாக ஏமாற்றி அழைத்துச்சுற்றிய அவன், இறுதியில் தனது ஊரான திண்டுக்கல்லுக்கு வந்துள்ளான்.

அங்கு தான் வழக்கமாக பெண்களுடன் தங்கிச்செல்லும் சுகன்யா தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளான்.

அங்கு வைத்து ஏற்கனவே திட்டமிட்டபடி ஷபீன் தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இரண்டு நாட்களாக பலமுறை சிறுமியை கொடுமைப்படுத்தி வந்த ஷபீன், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

இந்த சிறுமியைப் போல, ஷபீனால் சீரழிக்கப்பட்ட பெண்கள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here