ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் மருத்துவர் சாந்திலால் கொ ரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மருத்துவர் சாந்திலால் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் தான் இறந்து விட வாய்ப்பு உள்ளதாக பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த ஆடியோ நேற்று முன்தினம் ராஜபாளையத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டது.

அந்த ஆடியோவில், “ஹெலோ நான் சாந்திலால் பேசுகிறேன். அநேகமாக இன்று அல்லது நாளைக்குள் இறந்துவிடுவேன். எல்லாருக்கும் போயிட்டு வர்றேன். ரொம்ப நன்றி. சிகிச்சையெல்லாம் ஒன்றும் சரியில்லை. எனக்கு மூச்சு வாங்குகிறது. ஆக்ஸிஜன் அரையும் குறையுமாக வைக்கிறார்கள். சிகிச்சை சரியில்லை. அவ்வளவுதான். என் கடைசி கட்டம்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும் மன உளைச்சல் காரணமாக அவ்வாறு பேசி ஆடியோ வெளியிட்டதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here