தேனிமாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு வாகன சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த காவலர் ஒருவர் காய்கறி ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை மறித்து, 50 ரூபாயாவது செலவுக்கு குடுத்திட்டு போ என கேட்க ஓட்டுனர் மறுத்துள்ளார்.

நீங்களே பணம் தரவில்லை என்றால் போலீசை யார் கவனிப்பார்கள் என்றும், தங்கள் பிழைப்பு வடிவேல் காமெடி போல பரிதமாக உள்ளதாகவும் கூறி புலம்பிய காவலர், ஒரு கட்டத்தில் பணம் வேண்டாம் சாப்பிட ரெண்டு கேரட்டையாவது கொடு என கேட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே சோதனை சாவடியில் ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்ற வீடியோ வெளியாகி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here