இந்தியாவில் புதிதாக திருமணமான பெண்ணை அவரின் கணவர் விருப்பத்துடன் அப் பெண் பல வருடங்களாக காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் பீகார் மாநிலத்தின் தட்ஜேசி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் புதுமாப்பிள்ளை வேறு ஊரில் பணிக்கு சென்றுவிட்டார்.

அவரின் மனைவி திருமணத்துக்கு முன்னரே கரம் பஸ்வன் என்ற இளைஞரை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் அதை தொடர்ந்துள்ளார்.

அண்மையில் பஸ்வன், அப்பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார், இருவரும் தனிமையில் இருப்பதை பெண்ணின் குடும்பத்தார் பார்த்து அ திர்ச்சியடைந்தனர். இந்த விடயம் தொடர்பில் புகார் கிராம பஞ்சாயத்துக்கு போனது.

அப்போது பேசிய பஸ்வன், நானும் அவளும் வருடக்கணக்கில் தீவிரமாக காதலிக்கிறோம், ஆனால் வேறு நபரை அவருக்கு திருமணம் செய்துவிட்டனர் என கூறினார். இதையெல்லாம் அறிந்த பஞ்சாயத்துக்கு தலைவர்கள் அப்பெண்ணின் கணவருக்கு போன் செய்து மனைவியின் காதல் வி வகாரம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து குறித்த பெண்ணின் கணவரின் சம்மதத்தோடு பஸ்வனுக்கு அப்பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் நடத்தி வைத்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் பஸ்வன் மனைவியை தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து கூட்டி சென்றுள்ளார்.

நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் கூறுகையில், எங்களிடம் எந்த புகாரும் வரவில்லை, ஊர் பஞ்சாயத்து தலைவர்களே இந்த திருமணத்தை முன்னின்று செய்து வைத்துள்ளனர்.எனினும் இந்த விடயம் தொடர்பாக விசாரிப்போம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here