பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நேற்றைய தினத்தில் சுஷாந்தின் தந்தை அளித்துள்ள புகார் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், சுஷாந்தின் முன்னாள் காதலி தற்போது கண்ணீர் மல்க காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அக்காட்சியில் அவர் கூறுகையில், ‘நான் கடவுளையும், நீதித்துறையும் அதிகமாக நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன். என்னை குறித்து பல மோசமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.

எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படி எதுவும் பேசாமல் இருக்கிறேன். உண்மை வெல்லும்’ என தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் தந்தை கே.கே சிங் புகாரளித்த பின்னர், சுஷாந் சிங் மரண விவகாரம் மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here