தமிழகத்தில் கழிவறைக்கு சென்ற கர்ப்பிணி பெண் தீக்குளித்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி, துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் வேல்முருகன், இவரது மனைவி, ரஞ்சனா (23).

இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், ஒன்றரை வயதில் கமலேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது, தற்போது ரஞ்சனா 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர் வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட ரஞ்சனா வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கழிவறைக்கு சென்ற ரஞ்சனா, கமலேசுடன் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த உப்பிலியபுரம் பொலிசார், விசாரித்த போது வரதட்சணை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here