மத்தியப் பிரதேசம் இந்தூரில் லஞ்சம் கொடுக்காத சிறுவனின் தள்ளுவண்டியை மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்த்ததில் அதிலிருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து வீணாயின.

இந்தூரில் சாலையோரம் தள்ளுவண்டியில் முட்டைவிற்றுக் கொண்டிருந்த 14 வயதுச் சிறுவனிடம் மாநகராட்சி அலுவலர் ஒருவர் நூறு ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்கச் சிறுவன் மறுத்ததால் முட்டை வைத்திருந்த தள்ளுவண்டியை அந்த அலுவலர் புரட்டிக் கவிழ்த்துவிட்டார்.

இதனால் அதிலிருந்த நூற்றுக்கணக்கான முட்டைகள் அனைத்தும் உடைந்து வீணாயின. கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கடுமையாகச் செயல்படுத்துவதாகக் கூறி அரசு அலுவலர் ஒருவர் செய்த இந்த அட்டூழியம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

மத்தியப் பிரதேசம் இந்தூரில் லஞ்சம் கொடுக்காத சிறுவனின் தள்ளுவண்டியை மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்த்ததில் அதிலிருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து வீணாயின.

இந்தூரில் சாலையோரம் தள்ளுவண்டியில் முட்டைவிற்றுக் கொண்டிருந்த 14 வயதுச் சிறுவனிடம் மாநகராட்சி அலுவலர் ஒருவர் நூறு ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்கச் சிறுவன் மறுத்ததால் முட்டை வைத்திருந்த தள்ளுவண்டியை அந்த அலுவலர் புரட்டிக் கவிழ்த்துவிட்டார்.

இதனால் அதிலிருந்த நூற்றுக்கணக்கான முட்டைகள் அனைத்தும் உடைந்து வீணாயின. கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கடுமையாகச் செயல்படுத்துவதாகக் கூறி அரசு அலுவலர் ஒருவர் செய்த இந்த அட்டூழியம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here