குறும்பு செய்த 4 வயது மகளை, பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 4 வயது சிறுமி திஷா கக்டே, கடந்த 27ம் தேதி தனது தாய் சவிதாவுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

சிறுமியின் தந்தை உள்பட குடும்பத்தினர் அனைவரும் வெளியூருக்கு சென்றிருந்தனர். சவிதா கர்ப்பமாக இருந்ததால் அவரையும், மகளையும் மட்டும் வீட்டிலேயே விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சிறுமி திஷா அதிக சேட்டை செய்ததால் தாய் ஆத்திரமடைந்துள்ளார்.

அதனால் தன்னுடைய குழந்தை என்றும் பாராமல் மகளின் தலையை சுவற்றில் மோத வைத்துள்ளார்.அதன்பிறகு சார்ஜர் கேபிளை எடுத்து கழுத்தை நெரித்து கொடூரமாக நெரித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சவிதா தனது கணவருக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். வீடு திரும்பிய அவர், மகளின் சடலத்தை பார்த்து உடைந்து போனார்.

அவர் உடனடியாக கர்ப்பிணி மனைவி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தாய் சவிதாவும் தான் செய்த தவறை போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.

குழந்தை குறுப்புத்தனமாக இருந்ததாகவும், அதிக பிரச்னைகளை கொடுத்ததால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

குழந்தைகளுக்கு அழகே குறும்புத்தனம்தான். அதனை பார்ப்போர் அனைவரும் ரசிக்கும் போது, பெற்ற தாயே மகளை கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here