சென்னையில் கொள்ளை அடித்த பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொள்ளையர்கள் அன்னதானம் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே பாடி சீனிவாச நகரில் வசித்து வருபவர் செல்வம் ஆவார். இவர் வீட்டிலேயே ஹைட்ராலிக் மெஷின் செய்யும் தொழில் செய்து வருகிறார். ஊரடங்கு நேரத்தில் தனது உறவினர்களை பார்ப்பதற்காக குடும்பத்தாருடன் சொந்த ஊரான திருக்கோவிலூர் சென்றுள்ளார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.19 லட்சம் பணம் மற்றும் 16 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து செல்வம் கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு இருச்சக்கர வாகனங்களில் செல்வது தெரியவந்தது.

மேலும், 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளில் கொண்டு கொள்ளையர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த குமரவேல், ராகுல் டேவிட், அரவிந்த், தினேஷ்குமார், ஹரிஸ்குமார், நித்தியானந்தம், என்பது தெரியவந்தது.

குமரவேல் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் செல்வத்தின் உறவினர் ஆவார். செல்வம் இல்லாததை அறிந்த அவர் தனது நண்பர்களுடன் கொள்ளையடித்தாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் கொள்ளை அடித்த பணத்தில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியதாக குமரவேல் தெரிவித்துள்ளளார்.

அவர்களிம் இருந்து ரூ.13 லட்சம் மற்றும 16 சவரன் நகைகள் இரண்டு விலையுயர்ந்த செல்போன்களை  போலீசார் பறிமுல் செய்துள்ளனர். இதனை அடுத்து 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here