கைகளை சானிடைஸரால் சுத்தம் செய்துவிட்டு கணவருக்கு தேநீர் போடச் சென்ற பெண் ஒருவர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருச் சுழி நந்தவனம் தெருவைச் சேர்ந்த சோலைராஜ்(38), பனைகுடி டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.

இவரது மனைவி சோலையம்மாள்(36), இவர் கிராம உதவியாளராக பணியில் இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு குரு பிரசன்னா (12) என்ற மகனும், சோலை (9) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி வீட்டிலிருந்த கணவர் மனைவி சோலையம்மாளிடம் டீ டீகட்டுள்ளார். கணவருக்கு டீ போடுவதற்கு முன்பு கை மற்றும் கால்களில் சானிடைசர் தடவியிருந்த சோலையம்மாள் அப்படியே சென்று அடுப்பை பற்ற வைத்துள்ளார்.

அந்த சமயத்தில் திடீரென சோலையம்மாள் மீது சற்றும் எதிர்பாராத விதமாக தீப்பற்றியதுடன், உடல் முழுவதும் பரவியது.

இதனைப் பார்த்த செய்வதறியாது தவித்த சோலைராஜ் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து, மருத்துவமனையில் தீக்காயத்துடன் அனுமதித்துள்ளார்.

ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி சோலையம்மாள் உயிரிழந்ததை அடுத்து, இதுகுறித்து திருச்சுழி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here