நடிகை சித்ரா பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வெளியாகி கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்தான் சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், அதாவது ஹேமந்த்தின் தந்தை நேற்று உதவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், விசாரணை ஒரே பக்கமாக நடப்பதாகவும், விசாரணையை வேறு கோணங்களில் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சித்ரா போனுக்கு பல பிரமுகர்களிடமிருந்து அழைப்பு வரும் என்றும் ஏன் இப்படி அழைப்பு வந்தது, அதன் பின்னணி என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் போலீசிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் சித்ராவின் இன்னொரு பக்கம் குறித்து ரவிச்சந்திரன் பல தகவல்களை புகாரில் கூறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சித்ரா பற்றி ரவிச்சந்திரன் இவ்வாறு கூறியிருக்க கூடாது என்று சித்ரா ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குமுறி வருகிறார்கள்.

இதன் பிறகு ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது,

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மண்டபம் பார்க்க சென்றோம். அப்போது சித்ராவும் எங்கள் கூட வந்தார். அவர் இறப்பதற்கு 1 நாள் முன்பு மாலையில்தான் மண்டபம் பார்க்கச் சென்றோம். மண்டபத்தில் பதிவான அந்த சிசிடிவி காட்சி எங்களிடம் உள்ளது.

அதில் சித்ரா எங்களிடம் சந்தோஷமாக பேசியபடி வருகிறார். அப்புறம் எப்படி தற்கொலைக்கு தூண்டியதாக கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

சித்ரா செல்போனுக்கு யார் யாரிடமிருந்து கால் வந்தது, அவரை யார் யார் தொடர்பு கொண்டார்களோ அதைப் பற்றி விசாரிக்க வேண்டும். ஆர்டிஓ விசாரணை துவங்கும் முன்பாக போலீசார் முன்கூட்டியே ஹேமந்தை கைது செய்தது ஏன் என்று தெரியவில்லை. விசாரணைக்கு ஒத்துழைத்தும் திடீரென கைது செய்யப்பட்டார்.

எனவே, விரிவான விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் அவர்.

சித்ரா மாமனார் அளித்த வீடியோ காட்சியில், ஹேமந்த் மற்றும் சித்ரா இருவரும் ஆடி காரிலிருந்து இறங்கி மண்டபத்திற்குள் செல்லும் காட்சிகள் உள்ளன.

மண்டபத்திற்கு உள்ளே பதிவான காட்சிகளும் உள்ளன. அதில் சித்ரா பதற்றம் இல்லாமல் இயல்பாகத்தான் ஹேமந்த் மற்றும் குடும்பத்தாரிடம் பேசியபடி செல்கிறார்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here