அமெரிக்காவில் நிருபர் ஒருவர் கடும் வெள்ளத்திற்கு மத்தியில் பாலத்திற்கு மேல் நின்று நேரலையில் தகவல் அளித்துக்கொண்டிருந்த போது திடீரென சாலை இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு அமெரிக்க மாநிலமான வட கரோலினாவில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளது.

கடும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் வட கரோலினாவின் Charlotte நகரின் அலெக்சாண்டர் கவுண்டியில் பாலம் ஒன்று வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்ததை fox46 டி.வி நேரலையில் நிருபர் Amber Roberts காண்பித்தார்.

மேலும், பாலத்தின் மீது நின்றபடி அவர் தகவலளித்துக் கொண்டிருந்த போது பாலத்தின் மீதிருந்த சாலை திடீரென இடிந்து விழுந்த தண்ணீரில் அடித்துச் சென்றது.

சில அடி தூரத்தில் இருந்த Amber Roberts அலறிய படி அங்கிருந்து ஓடினார்.

பின்னர், குறித்த வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த Amber Roberts, தானும் தன்னுடன் இருந்த ஒளிப்பதிவாளரும் நலமாக இருப்பதாக பதிவிட்டார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அலெக்சாண்டர் கவுண்டி மக்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டார்.

இதுவரை அலெக்சாண்டர் கவுண்டியில் 4 பாலங்கள் மற்றும் 50 சாலைகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உலக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here