தாயின் நடத்தையால் கோபமடைந்து மகனே தாயை வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் வனஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் பாரவ்வா. இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்துவிட்ட நிலையில் தனது மகன் சிவப்பாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து, பாரவ்வா அதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒருவருடன் உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால், ஊர் மக்கள் பலர் சிவப்பாவிடம் பல்வேறு விதமாக கூற, தன் தாயுடன் அடிக்கடி இதுகுறித்து அவர் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்கள் முன்னதாக வயல்வேலை முடித்து விட்டு வந்த தன் தாய்க்கு மதுவை குடிக்க கொடுத்துள்ளார் சிவப்பா.

அதன் பிறகு, அவரை வயலுக்கு அழைத்து சென்று அங்கு வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, வயலில் பாரவ்வா இறந்து கிடப்பது தெரிந்து ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் பாரவ்வாவின் சகோதரி ஒருவர் சிவப்பா மீது சந்தேகம் இருப்பதாக கூறியதால் சிவப்பாவை போலீஸார் அழைத்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் தான் தனது தாயை வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சிவப்பா ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here