திருவாரூரில் இருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு அதிவேகமாக 2 மணி நேரத்தில் விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வாழ்க்கை கிராமமத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு இரு சிறுநீரகமும் செயல் இழந்ததால் கடந்த 6 மாதங்களாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் திவிர சிகிச்சைக்கு மூன்று மணி நேரத்தில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்த தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூரில் இருந்து புதுச்சேரிக்கு 2 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்டு வினோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சாதாரணமாக நான்கு மணி நேரத்தில் செல்லக் கூடிய இந்த சாலையின் வழியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பாதுகாப்பாக சென்று நோயாளியின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அல்மூமினுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here