ருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். இங்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடக மேடையில் ஒன்றாக நடித்த ஜோடி, இப்போது ரியல் ஜோடியாக கை பிடித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியர்களாக பணிபுரிந்த இருவர் ஒரே மாதத்தில் குழந்தை பெற்றனர். நண்பர்களான இருவரும் தங்களது குழந்தைகளுக்கு ஸ்ரீராம், ஆர்ய ஸ்ரீ என பெயர் சூட்டி வளர்த்து வந்துள்ளனர்.

இவர்களது நான்காவது வயதில் இருவரையும் ‘’ஒரு ராணுவ வீரரின் திருமணம்’’ என்னும் நாடகத்தில் கணவர், மனைவியாக நடிக்க வைத்துள்ளனர்.

பல ஆண்டுகள் சென்றது. ஸ்ரீராம் ராணுவ அதிகாரி பணிக்கு தேர்வெழுதி ராணுவ அ திகாரியும் ஆகிவிட்டார். ஆர்ய ஸ்ரீயும் மருத்துவம் படித்துள்ளார்.

இந்நிலையி;ல் ஸ்ரீராம் நாடகத்தில் நடித்த தங்கள் பழைய போட்டோவை தேடி எடுத்து, ஆர்ய ஸ்ரீயை தொடர்பு கொண்டு நாம் ஏன் இப்போது திருமணம் செய்து கொள்ளக் கூடாது எனக் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்க, இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த ஜோடி திருமணம் செய்துள்ளனர்.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here