தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நண்பர்களுடன் முயல் வேட்டைக்குச் சென்ற சிறுவனின் தலையில், ஈட்டி பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அம்பலச்சேரி மேலத்தெருவைச் சேர்ந்த தங்கத்துரையின் மகன் இசக்கிமுத்து. இவர் தனது சகோதரர் சுடலை மற்றும் 6 நண்பர்களுடன் முயல் வேட்டைக்குச் சென்றார்.

காட்டுப்பகுதியில் முயல் ஓடியதை கண்டு, இசக்கிமுத்துவின் நண்பர்களில் ஒருவர், ஈட்டியை அதன் மீது வீசியதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஈட்டி குறி தவறி இசக்கிமுத்துவின் தலையில் குத்தியது. இதில் காயமடைந்த அவர், உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து உயிரிழந்தார். இசக்கிமுத்துவின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here