கிரேஸி கண்மணி, கால்மேல காசு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தியா மேனன், கேரளத்து வரவு. சென்னை நகரின் கடைகளில் ஏறி இறங்கி அங்கே என்ன கிடைக்கும் என்று சொல்வது முதல் முக்கியமான இடங்களை பற்றி விளக்கி சொல்வதும் தான் கிரேஸி கண்மணியின் வேலை.

ஸ்டூடியோவுக்குள் இருந்து கொண்டு நேயர்களுடன் போனில் பேசி கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்பவர்களின் போனுக்கு ரீ சார்ஜ் பண்ணிவிடுவது கால்மேல காசு நிகழ்ச்சி.

இது குறித்து பேசிய தியா.. 10 வயதில் தொகுப்பாளராக அறிமுகமானேன். மலையாள சேனல்களில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது முதல் என் பணி ஆரம்பமானது. டிகிரி படிச்சு முடிச்சதும் சென்னை வந்தேன்.

வளவளன்னு தமிழ்பேச கற்றுக் கொண்டுவிட்டு தொகுப்பாளினியாகிவிட்டேன். என்னோட சொந்த பெயர் எனக்கே மறந்துவிடும் போலிருக்கிறது. எல்லோருமே கண்மணின்னு தான் கூப்பிடுறாங்க.

தோழிகள் சினிமாவில் நடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. சினிமாவில் நண்பர்களும் இல்லை. தொகுப்பாளினி வேலைதான் பிடிச்சிருக்கு.

அதையே சிறப்பாக செய்யலாம் என்பதுதான் என் எண்ணம். என்கிறார் தியா மேனன். கேரளத்து வரவான இவர் சன் டிவியில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். நாளுக்கு நாள் இவரது அழகு கூடிக்கொண்டே செல்வதால் ரசிகர் பட்டாளமும் இவருக்குப் பின்னால் படையெடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். இதுவரை கவர்ச்சி இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வந்தார்.

ஆனால் இந்த முறை அனைவருக்கும் டப் கொடுக்கும் வகையில் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இந்த அழகையா இவ்வளவு நாளா பூட்டி வைத்திருந்தார்கள் என ரசிகர்கள் கமெண்ட்டுகளில் தங்களது ஆசையை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள்  இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here