இலங்கை பெண் லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் திடீர் மரணத்திற்கான காரணம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரியநேசனின் உயிர் பிரிந்ததாக அவரது நண்பர்கள் கூறியுள்ளதாக தகவல் வைரலாகி வருகின்றது.

அதாவது மரியநேசன் வேலையை முடித்துவிட்டு தனது அறைக்கு வந்து படுத்துள்ளார். அப்போது தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மரிய நேசனின் மறைவு செய்தி லொஸ்லியாவின் ரசிகர்களை உலுக்கியது. அப்பா மீது பேரன்பு கொண்டிருந்த லொஸ்லியாவுக்கும் இந்த செய்தி இடியாய் இறங்கியது.

இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், கனடாவில் தான் தங்கியிருக்கும் வீட்டின் பெட்ரூமில் சடலமாக கிடக்கும் வீடியோ நேற்று வெளியானது.

பெட்டில் குப்புற படுத்திருந்த அவர் அப்படியே மரணித்து கிடந்தார். அருகில் டேப், செல்போன், ரிமோட் மற்றும் லெட்டர் ஒன்றும் இருந்தது.

அந்த வீடியோ பெரும் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அவருக்கு அருகில் இருக்கும் வெள்ளை பேப்பர் உண்மையிலேயே கடிதம் தானா? அவர் தற்கொலை செய்து கொண்டாரா என பல கேள்விகளை எழுப்பினர். இப்படியான சூழலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உலக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here