நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகி ஓடாமல் போய்விட்டது. இந்நிலையில், இவர் ஒப்பந்தமாகியுள்ள புதிய படம் ஒன்றில் பிகினி உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி.

மேலும், திரைப்படங்களில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவது குறித்து கருத்து தெரிவித்த அஞ்சலி ” நான் மட்டுமல்ல, பல முன்னணி நடிகைகளும் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள்.

சினிமாவில் இப்போது இது சர்வ சாதாரணமாகி விட்டது. நான் கவர்ச்சியாக ஆடுவதில் தவறு இல்லை. இதனால் நான் நடித்து வரும் மற்ற படங்களுக்கு வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்று அவர் கூறியுள்ளார்.

என்றும் இளமையுடன் இருக்க பிட்னஸ்ஸில் மிகுந்த கவனம் செலுத்திவரும் அஞ்சலி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்க ஜிம்மில் ஒர்க்கவுட் செய்துவிட்டு குந்த வைத்து உட்கார்ந்தவாறு எனக்கு பிரேக் ஃபாஸ்ட் மீது நினைப்பாகவே இருக்கிறது என கூறியுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் எப்ப பார்த்தாலும் சோறு சோறு சோறு என வடிவேலு பாணியில் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here