ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. இவருக்கு இந்த காலத்தில் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் நடிகை நதியாவின் மவுசு அதிகமாக இருக்கும்பொழுது விளம்பரத்திற்காக அவருடைய பெயரை வைத்து வியாபாரம் செய்து வந்தார்கள். அந்தவகையில் நதியா ஹேர்ஸ்டைல், நதியா சைக்கிள், நதியா வளையல், என அனைத்துப் பொருட்களுக்கும் நதியாவின் பெயரை சேர்த்துக் கொண்டார்கள்.

இப்படி பெயர் போன நமது நடிகை தற்சமயம் 2 மகளுக்கு தாயாகி உள்ளார் அதுமட்டுமில்லாமல் தற்போது கூட தனது மகள்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு தனது அழகை மிக அழகாக பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய மகளின் பிறந்தநாள் அன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவருடைய மகளை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஒருசிலர் இவர் மிகப்பெரிய பேரழகியாக வருவார் என கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இது போன்ற செய்திகளை படிக்க நமது இணையத்தை பின் தொடரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here