மதுரையில் பெற்ற மகளை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை வண்டியூர் சங்கு நகர் மகாராஜா தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆசைதம்பி. இவரது மகள் மீனாட்சி தேவி (26), திருமணம் ஆகாத இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மீனாட்சி நபர் ஒருவரை காதலித்து வருவது அவரது தந்தைக்கு தெரியவந்துள்ளது. உடனே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளார்.

ஆனால் மீனாட்சியோ தந்தையிடம் வாக்குவாதம் செய்தது மட்டுமின்றி, காதலனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் பிடிவாதமாக இருந்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த சின்னதம்பி இரவில் தூங்கிக்கொண்டிருந்த மகளை வீட்டிலிருந்த கட்டையால் அடித்துக்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு யெ்து வருகின்றனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here