தமிழகத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், இவரது மனைவி ஹேமாவதி(24).இந்த தம்பதிக்கு இரண்டறை வயது ஆண் குழந்தை மற்றும் 5 மாத கைக்குழந்தைகள் உள்ள நிலையில் ஹேமாவதி தனது படுக்கையறையில் இருந்துள்ளார்.

அவரது கணவர் சந்தோஷ் குமார் வெளியில் படுத்திருந்தநிலையில், திடீரென மனைவியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்த போது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதைக் கண்டு அதிர்ந்த அவர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு ஹேமாவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் விசாரித்தபோது, லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யும் சந்தோஷ்குமார் தன்னிடம் வேலை பார்த்த ஓட்டுநருக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம்.

இதனால் குறித்த ஓட்டுனரின் தாயார் ஹேமாவதியை திட்டியதாகவும், அதனால் மனமுடைந்த இத்தகைய முடிவினை எடுத்திருக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here