கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள சூர்யா நகரை சேர்ந்த மணிகண்டன் பிரதிக்ஷா தம்பதியினரின் 13 வயது மகன் யுவன். இவர் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான்.

இந்த சூழ்நிலையில் கோவை ஜெயேந்திர சரஸ்வதி சாலையில் ரோந்து பணியில் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்துள்ளார்.

அப்போது நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு சக நணபர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவனை காவலர் நிறுத்தி விசாரித்துள்ளார்.

கோவையில் சிறுவனை காவலர்கள் தாக்கியதாக புகார் – நடந்தது என்ன..?#Coimbatore

Posted by புதிய தலைமுறை on Sunday, August 23, 2020

அப்போது நண்பரின் வீட்டிற்குச் சென்று வருவதாக கூறிய யுவனின் பெற்றோரிடம் முழு ஊரடங்கு காலத்தில் பையனை வெளியே அனுப்பாதீர்கள் என்று சொல்லி அறிவுரை கூறுவதற்கு பதில், தன்னுடைய கையில் வைத்திருந்த லத்தியால் சரமாரியாக கை கால்களில் அடித்துள்ளார்.

இதில் யுவனுக்கு கை கால்களில் ரத்தகாயம் ஏற்பட்டு வீங்கியுள்ளது. சிறுவன் என்று கூட பாராமல் அடித்த காவலர் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களை அடிப்பதை காவலர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என யுவனின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here