Home வெளிநாடு ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி: பிறப்புறுப்பின் மூலமே கழிவுகளை வெளியேற்றும் சோகம்

ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி: பிறப்புறுப்பின் மூலமே கழிவுகளை வெளியேற்றும் சோகம்

551
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

ரஷ்யாவில் ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி, மூன்று வருடமாக பிறப்புறுப்பின் மூலமாகவே உடல் கழிவுகளை வெளியேற்றி வருகிறார்.

ரஷ்யாவை சேர்ந்த வரிய கல்சேவ், என்கிற சிறுமி பிறக்கும் போதே ஆசனவாய் இல்லாமல் பிறந்துள்ளார்.

ஆனால் இதனை மருத்துவர்கள் கவனிக்க தவறிவிட்டனர்.

அவளுடைய பிறப்புறுப்பும் மாறுபட்ட விதத்தில் இருப்பதை பார்த்து பெற்றோர் சந்தேகமடைந்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறியபொழுது, பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், அதற்கான நேரம் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் எனக்கூறியுள்ளனர்.

ஆனால் மூன்று வயதை எட்டியதும் சிறுமி மலச்சிக்கல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மகளை எடுத்துச்சென்று ஆண்ட்ரே – ஸ்வெட்லானா தம்பதியினர் சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மகளின் நிலை குறித்து பேசியுள்ள ஆண்ட்ரே, என்னுடைய மகள் பிறக்கும்பொழுதே உறுப்புகளுக்கு இடையே ஒரு அசாதாரண இணைப்பின் காரணமாக ஆசனவாய் இல்லாமல் பிறந்துவிட்டாள். அதன்விளைவாக சிறிது நாட்கள் கழித்து பிறப்புறுப்பின் வழியே மலம் வெளியேற்ற ஆரம்பித்துவிட்டாள்.

உள்ளுரில் எந்த மருத்துவர்களும் இதனை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. தற்போது அவளுக்கு முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவிட்டது.

இம்மாத இறுதியில் இரண்டாவது அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. நிறைய நாட்களை நாங்கள் இழந்துவிட்டோம். இப்போது மாஸ்கோ மருத்துவர்களின் கைகளில் தான் அனைத்தும் உள்ளது எனத்தெரிவித்துள்ளார்.

மேலும் வர்த்தக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here