இன்றைய காலகட்டத்தில் ஆங்கில மருத்துவம் அதிகரித்ததால், நமது பாரம்பரிய இயற்கை மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம்.

இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல மருத்துவ பலன்கள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன.

இந்த தலைமுறையினருக்கு இயற்கை மருத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது.

கிராமங்களில் தானாக வளர்ந்த மரம், செடி, கோடி போன்றவை மூலமே நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

இதனை நமது முன்னோர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாம் அவற்றை இப்போது உபயோகிப்பதில்லை.

தற்போதைய வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் குழந்தையின்மை பிரச்சனையால் பல ஆங்கில மருத்துவமனைகளை தேடி அழைக்கின்றனர்.

குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாக ஆண்மை குறைவு பிரச்னை இருந்துவருகிறது.

தூதுவளைக் கீரையை நன்றாக வதக்கி புளியுடன் சேர்த்து குழம்பாக வைத்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தூதுவளையானது வயல்வெளிகளில் தானாக வளர்ந்து வரும் செடியாகும். இது கிராமங்களில் அதிக அளவில் கிடைக்கக்கூடியது. இதனை நமது வீடுகளில் செடியாகவும் வளர்க்கலாம்.

  • தூதுவளை இலையுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், சளி முதலியவை நீங்கும்.
  • தூதுவளையை உலர்த்தி பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் நீங்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். மேலும் ஜீரண சக்தியைத் தூண்டும்.

மேலும் மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here