ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது.  இந்தத் தொடரின் முதல் போட்டியே சென்னையில் தான் தொடங்குகிறது.

கடந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றதால், இந்த முறை முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. இதுவே ஐபிஎல் போட்டியின் வழக்கம்.

அதன்படி 13 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன், தோனி த‌லைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.  இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்தது.

இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னைக்கு வருகை தந்தனர். தோனி, ஹர்பஜன், ரெய்னா உள்ளிட்ட பலரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். சிஎஸ்கே அணிவீரர்களே இரு அணிகளாக பிரிந்து பயிற்சியாக கிரிக்கெட் விளையாடினர். ஆனால் இது ஐபிஎல் போட்டிதானோ என்று நம்பும் அளவுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

குட்டி தல என்று செல்லமாக அழைக்கப்படும் ரெய்னா மைதானத்தில் நுழைந்ததும் ரசிகர்கள் குரலெழுப்பி ஆரவாரம் செய்தனர். அவர்களை நோக்கி ரெய்னா கையசைக்க மைதானமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது.

மேலும் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here