2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இது ஐபிஎல் T20 தொடர் 12வது சீசன் ஆகும்.

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்த முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் ஆடிவருகின்றது

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க மட்டையிட்டாளர்கள் பார்திவ் பட்டேல், கேப்டன் கோலி களமிறங்கினர்.

விராட் ஆரம்பத்திலே சொதப்பிய நிலையில் 12 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து அடுத்தடுத்த வந்த மட்டையாளர்கள், கடகடவென அவுட் ஆகி 17.1 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெங்களூரு அணி 70 ரன்களை எடுத்தது.

பெங்களூரு அணியில் துவக்க மட்டையாளரான பார்திவ் பட்டேல் அதிக பட்சமாக 29 ரன்களை எடுத்தார்.

இதனையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. எளிதில் வெற்றிபெற்றுவிடலாம் என்று களமிறங்கிய சிஎஸ்கே அணி ஆரம்பத்தில் சொதப்பியது.

சென்னை அணியில் ராயுடு மட்டும் அதிகபட்சமாக 28 ரன்களை எடுத்தார். மிகவும் திணறலுடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 71 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றது.

ஆனாலும் இந்த ஆட்டத்தில் கஷ்டப்பட்டு வெற்றிபெற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சோகமடைந்தனர்.

மேலும் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here