அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் நாசா. இந்த நிறுவனமானது அறிவியல் ஆராய்ச்சி குறித்த கட்டுரை போட்டியை நடத்தியது.

இந்த அறிவியல் ஆராய்ச்சி போட்டியானது இந்தியா முழுவதிலும் சுமார் 22 மாநிலங்களில் இருக்கும் 11 ஆயிரத்து 250 மாணவ – மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு., நாசா மையத்தின் பல்வேறு அறிவிப்பு கட்டுரைகளை தேர்வு செய்து., அதற்கான கட்டுரைகளை எழுதி சமர்ப்பித்தனர்.

இந்த கட்டுரைகளை எழுதிய மொத்த மாணவ – மாணவியர்களில் சிறந்த 3 மாணவ – மாணவியர்கள் அமெரிக்காவில் இருக்கும் நாசா விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

அவ்வாறு வழங்கப்பட்ட கட்டுரைகளின் தலைப்புகளில் “டாக்டர் கலாம் மை ஹீரோ” என்ற தலைப்பினை தேர்வு செய்த மதுரையை சார்ந்த மாணவி கட்டுரையை எழுதி அனுப்பியுள்ளார். இதனை கண்ட நாசா இவர் எழுதிய கட்டுரையை தேர்வு செய்து., இந்திய அளவில் முதல் மாணவியாக அறிவித்துள்ளது.

மதுரையை சார்ந்த மாணவி தான்யாவிடம் இது குறித்து கேட்ட போது., நாசாவில் நடைபெறும் விண்வெளி ஆராய்ச்சி போட்டிக்கு தேர்வாகியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நம்பிக்கையை வழங்கியுள்ளது. எனக்கு கிடைத்த அறிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவேன் என்று தெரிவித்தார்.

மாணவி தான்யா வரும் மே மாதத்தில் 13 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் மும்பை மற்றும் ஆந்திராவை சார்ந்த இரண்டு மாணவர்களுடன் சேர்த்து கலந்து கொள்கிறார்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here