Home வர்த்தகம் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்து!!போயும் போயும் இதிலா??

இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்து!!போயும் போயும் இதிலா??

243
0

நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்தியா முழுக்க 377 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் அளிக்கின்றனர்.

705 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களும் 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆச்சரியமான தகவல் என்னவென்றால், தமிழகத்தில் தான் அதிகப்படியான ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறுகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் 127 கோடியே 84 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் 78 லிட்டர் மதுபானங்களும், பஞ்சாபில் 116 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.312 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் அளிக்கின்றனர். இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரம்  ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இதனை சேலம் எடப்பாடியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற வர்த்தக செய்திகளைப் படிக்க நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here