Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

இலங்கை தேவாலயங்களில் நடைபெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள தேவாலயங்களில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சக்திவாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியர் தேவாலயத்திலும், நீர்க்கொழும்புவில் உள்ள ஒரு இடத்திலும் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலும் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழுமையான விவரங்கள் பின்னர் தெரியவரும்.

மேலும் இலங்கை செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here