Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

தோனி எடுக்கும் முடிவுகள் பலமுறை தவறாகவும் போகும் என்று இந்திய சுழல் பந்துவீச்சாளர் குல்தீய் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. விக்கெட் கீப்பரான அவர் எடுக்கும் முடிவுகள், அணிக்கு பலமுறை வெற்றியைத் தேடி தந்திருப்பதாக கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ’தோனி அணியில் இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை’ என்று தெரிவித் திருக்கிறார், இந்திய கேப்டன் விராத் கோலி. துணை ரோகித் சர்மா உட்பட பல வீரர்களும் தோனியின் ஆலோசனை தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த ஐபிஎல் தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இதில் சென்னை அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட, இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம், தோனி ஆலோச னை பற்றி கேட்டபோது, ‘’ அவர் தேவையில்லாமல் மைதானத்துக்குள் பேசமாட்டார். ஏதும் சொல்ல வேண்டும் என்றால், ஓவர்களுக்கு இடை யே பேசுவார். அப்போது அவர் சில டிப்ஸ்களை கொடுப்பார். அப்படி அவர் சொல்லும் டிப்ஸ்கள் பலமுறை தவறாகப் போயிருக்கிறது. ஆனால், அதை அவரிடம் நாங்கள் சொல்ல முடியாது’’ என்று சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here