Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்’ என இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் யஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

அணியில் குல்தீப் யாதவ் உடன் இணைந்து விளையாடுவது குறித்து சாஹல் கூறும்போது, “நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் அனைத்து நிலையிலும் அதை கடைபிடித்து வருகிறோம்.

ஆட்டத்தின் போக்கை புரிந்துகொண்டு அதற்கேற்றதுபோல நாங்கள் எதாவது செய்வோம். எங்களின் போக்கை நாங்கள் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. குல்தீப் எனது தம்பி போன்றவர். நாம் வீழ்ச்சி அடையும் போது சிலரிம் மனம் விட்டு பேச நினைப்போம்.

அப்போது நான் குல்தீப்பிடம் பேசுவேன். நான் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது அவர் என்னிடம் பேசுவார். நாங்கள் இருவரும் ஒன்றாக அணியில் விளையாடம்போது நாங்கள் தொடர்பில் இருப்போம்” என்றார்.

தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய சாஹல், “என்ன ஆனாலும் மஹி பாய் சொன்னால் அதை நாங்கள் கேட்போம். நாங்கள் தவறாக செல்லும்போது அவர் எங்களை வழி நடத்துவார்.

நாங்கள் அறிமுகமான முதல் போட்டியில் தோனியின் பேச்சை எப்படி கேட்டோமோ அது இன்றும் மாறவில்லை. நாங்கள் சுயமாக ஏதேனும் திட்டம் தீட்டினால் அதை தோனியிடம் பகிர்ந்துகொள்வோம்” என்றார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு ஸ்பின் பவுலர்களில் ஒருவர் யஸ்வேந்திர சாஹல். குல்தீப் யாதவ் சுழற்பந்தில் சிறப்பாக விளையாடிய போதிலும், சாஹல் சில நேரங்களில் மிரட்டலாக பந்துவீசி எதிரணியின் விக்கெட்டுகளை சரிக்கக்கூடியவர்.

மேலும் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here