Home Uncategorized சொந்த கணவரை 24 முறை மாறி மாறி திருமணம் செய்த மனைவி.!! ஆச்சரியத்தை உண்டாக்கும் பின்னணி...

சொந்த கணவரை 24 முறை மாறி மாறி திருமணம் செய்த மனைவி.!! ஆச்சரியத்தை உண்டாக்கும் பின்னணி தகவல்.!!

247
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

அமெரிக்கா நாட்டை சார்ந்தவர் ஈவன். இவர் கடந்த 1990 ம் வருடத்தின் போது மெக்சிகோ நாட்டிற்கு சென்று அங்குள்ள சூசன் என்ற பெண்மணியுடன் நட்பாக பழகியுள்ளார்., பின்னர் அமெரிக்காவிற்கே திரும்பியுள்ளார். இவர்கள் இருவரும் இந்த சந்திப்பிற்கு பின்னர் சுமார் 5 வருடங்களாக சந்திக்காத நிலையில்., கடந்த 1995 ம் வருடத்தின் போது இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

இந்த சமயத்தில் இவர்கள் இருவரும் தங்களின் அலைபேசி எண்ணை பகிர்ந்து கொண்டதை அடுத்து., அலைபேசியின் மூலமாக பேசி வந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சூசனிடம் தனது காதலை வெளிப்படுத்தியதை அடுத்து., சூசன் இவரின் காதலை ஏற்று கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1997 ம் வருடத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில்., இவர்களுக்குள் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு தெரிந்த பல நபர்கள் திருமணம் முடிந்த பின்னர் சில காலங்கள் ஒற்றுமையுடன் இருந்து கொண்ட பின்னர்., இருவருக்கும் இடையே ஏற்படும் சிறு மன கசப்பை பெரிது படுத்தி., அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு பின்னர் விவாகரத்து பெறுகின்றனர். இதன் காரணமாக இவர்கள் இருவரும் பிரியவே கூடாதென்று முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி., இவர்களின் திருமண நாளன்று மீண்டும் புதிய திருமணம் போல திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இதன் மூலமாக வருடா வருடம் புதிய வாழ்க்கையை தொடங்கும் உணர்வு ஏற்பட்டதை அடுத்து., இதனை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல சூசனிற்கு யோசனை வந்துள்ளது.அதன் படி., இவர்களின் திருமண நாளன்று பிற நாடுகளுக்கு சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி., இவர்களின் திருமண நாளன்று திருமணம் செய்து சுமார் 21 வருடங்களில் 24 முறை திருமணம் செய்துள்ளார். அமெரிக்கா., பஹாமஸ்., கனடா., பிரான்ஸ்., ஜேர்மனி., மெக்சிகோ போன்ற பல்வேறு நாடுகளில் தங்களின் திருமணத்தை செய்து கொண்டு வாழ்க்கையை புதியதாக துவங்கியுள்ளனர். மேலும்., இவர்களின் அடுத்த திருமணம் ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள ஓமிங் மாகாணத்தில் வைத்து நடத்தவுள்ளனர்.

மேலும் இது போன்ற உலகச் செய்திகளுக்கு நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here