பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது குறித்து பீதி அடையத் தேவையில்லை என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் மே 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டனில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரவீந்திர ஜடேஜா மட்டும் அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தோனி சற்று நேரம் தாக்குபிடித்து 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர், விளையாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பயிற்சி ஆட்டத்திலே இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து சில விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல் சொதப்பிவிட்டார்கள் என கூறினர்.

இந்நிலையில், பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது குறித்து சச்சின் கருத்து தெரித்துள்ளார். “ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அணியை பற்றி நான் மதிப்பீடு செய்ய மாட்டேன். இது ஒரு தொடர். இதுபோன்ற விஷயங்களும் நடக்கத்தான் செய்யும்.

முக்கியமான போட்டிகள் இன்னும் தொடங்கவே இல்லை. நான் ஒரு நிலைக்கு வந்துசேர வேண்டும். ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் இப்படி நடக்கலாம். என்ன மாதிரியான மைதானம் என்பதை புரிந்து கொள்ளவே பயிற்சி ஆட்டங்கள் பயன்படும். அதற்குள்ளாகவே பீதி அடைய தேவையில்லை” என்று சச்சின் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற விளையாட்டு செய்திகளுக்கு நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here