உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணியும், தென் ஆப்பிரிக்க அணி மோதுகிறது.

கடந்த 28-ஆம் தேதி நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் தோனி இருவரின் அதிரடி சதம் அடித்து அசத்தினார். 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவிந்தது.

அடுத்து 360 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் கே.எல். ராகுல், பாலிவுட் நடிகை ஒருவரும் காதலித்து வருவதாக செய்தி பரவி வருகிறது. கேஎல் ராகுலும், பாலிவுட் நடிகை சோனல் சவுகானை காதலித்து வருவதாகவும், அவர்கள் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து நடிகை சோனல் சவுகான் பேட்டி அளித்துள்ளார். எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரியும். எங்கள் துறையில் நுழைவதற்கு முன்பே இருவருக்கும் நல்ல பழக்கம் உள்ளது. ஒன்றாக டேட்டிங் சொல்வோம் ஆனால் காதலிப்பதாக வந்துள்ள செய்தி உண்மையில்லை என கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற விளையாட்டு செய்திகளுக்கு நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here