கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.26 ஆயிரத்தை விட அதிகமாக அவ்வப்போது விலையேற்றத்தை கண்டு வருகிறது. அதன்படி., இன்று (02/06/19) ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,358 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.26,864 விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல், 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,079 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.24,632 ஆகவும் நேற்று விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரையில் இன்று (02/06/19) 1 கிராமுக்கு ரூ.39.60 ஆகவும்., 10 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.396 ஆகவும்., 100 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.3960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாதம் ஆரம்பித்த முதலாகவே தங்கம் வெள்ளி விலை ஏறுமுகமாக இருந்தது. அதிகப்படியான சுபநிகழ்ச்சிகள் நடக்கும் மாதமாக இது இருக்கின்றது. எனவே, தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது அதிகரித்து இருந்தது.

ஆனால், தற்பொழுது சவரனுக்கு 300 ரூபாய் வீதம் குறைந்த தங்கத்தின் விலையானது மீண்டும் ரூ.200 வீதம் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் இது போன்ற வர்த்தக செய்திகளைப் படிக்க நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here