Home தமிழ்நாடு “தென்மேற்கு பருவ மழை நாளை தொடங்கும்” சென்னை வானிலை மையம் புதிய தகவல்..!

“தென்மேற்கு பருவ மழை நாளை தொடங்கும்” சென்னை வானிலை மையம் புதிய தகவல்..!

117
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜுன் 1-ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்தாண்டு ஜுன் 8-ஆம் தேதி (நாளை) தொடங்கக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 6 நாட்கள் தாமதமாகி 7 ஆம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே இந்திய வானிலை தெரிவித்திருந்தது. இதையடுத்து ஒரு ‌நாள் தாமதமாக 8 ஆம் தேதி (நாளை) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளதாகவும், மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். அதன் காரணமாக நாளை கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பசலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பநிலை 2லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற வானிலை செய்திகளுக்கு நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here