Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

சமூக செய்ற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து, காணாமல் போன நிலையில், முகிலனை ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி டிபேன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து முகிலனை தமிழகப் போலீஸார் தேடி வந்த நிலையில், அவரை திருப்பதி ரயில் நிலையத்தில் நேரில் பார்த்ததாக, அவரது பள்ளித் தோழர் சண்முகம் என்பவர், முகிலனின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திர ரயில்வே போலீஸாரின் பிடியில், முகிலன் உள்ள வீடியோ காட்சிகளும் வெளியாகியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து முகிலன் மனைவி பூங்கொடி உள்ளிட்டோர், காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது, காரின் முன்பக்க டயர் வெடித்தது.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையின் மையத்தில் இருந்த தடுப்புக்கட்டையில் கார் மோதியதில், முகிலன் மனைவி பூங்கொடி உள்ளிட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு பூங்கொடி உள்ளிட்டோர் உடனடியாக சென்னை நோக்கி புறப்பட்டனர். மேலும் தமிழக செய்திகளை தெரிந்துகொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here