Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சிப் பணிக்கு (Management Trainee – Plantation) காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன. இதற்கான அறிவிப்பில் 8 காலிப்ப பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவில் 2 பேர், பிசி பிரிவில் 2 பேர், எம்.பி.சி./ட.என்.சி. பிரிவில் 2 பேர், எஸ்.சி. பிரிவில் ஒருவர் மற்றும் எஸ்.சி.ஏ. பிரிவில் ஒருவர் வீதம் 8 பேர் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் https://www.tnpl.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தை டவுன்லோட் செய்யலாம். விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


கல்வித்தகுதி
வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் முழு நேர நான்கு ஆண்டு பி.எஸ்.சி. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி. ஆதிதிராவிடர், எஸ்.டி. ஆகிய பிரிவினர் 65% மதிப்பெண்களுன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற பிரிவினர் 70% பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். (அல்லது) தாவரவியல் துறையில் முழு நேர எம்.எஸ்.சி. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி. ஆதிதிராவிடர், எஸ்.டி. ஆகிய பிரிவினர் 65% மதிப்பெண்களுன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற பிரிவினர் 70% பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
பொதுப் பிரிவினருக்கு – 25 வயது
பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி. பிரவினருக்கு – 27 வயது
எஸ்.சி, எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு – 30 வயது
சம்பளம்
முதல் ஆண்டு பயற்சியின்போது மாதம் தோறும் ரூ.22,500 கிடக்கும். இரண்டாம் ஆண்டு பயிற்சியில் மாதம் ரூ.25,350 கொடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here