Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும் நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த வேண்டும் என, மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பூஜ்ஜிய நேரத்தில் மதிமுக உறுப்பினர் வைகோ நியூட்ரினோ திட்டம் குறித்துப் பேசியதாவது

தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை என்ற கடினப் பாறைகளை உடைத்து நொறுக்கி, நியூட்ரினோ துகள்கள் ஆய்வு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது. அதற்காக, 1200 டன் டைனமைட் வெடிபொருட்களைப் பயன்படுத்தி 12 லட்சம் டன் கடினப் பாறைகளையும் ஒட்டுமொத்தமாக 20 லட்சம் டன் பாறைகளையும் உடைத்து நொறுக்கப் போகின்றார்கள்.

இந்தச் சுரங்கம் ஒரு கிலோ மீட்டர் நீளம் 25 மீட்டர் அகலம் 15 மீட்டர் சுற்றளவில் அமைகின்றது. உள்ளே பக்கவாட்டில் மேலும் இரண்டு சுரங்கங்களை ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்குத் தோண்டப் போகின்றார்கள். இந்த மூன்று சுரங்கங்களும் இணைகின்ற மையப் புள்ளியில் மட்டும் 11 லட்சம் டன் பாறை வெட்டி எடுக்கப்பட இருக்கின்றது. இந்த நியூட்ரினோ திட்டத்தால் உலகின் தொன்மையான கடினப் பாறைகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகக் கடுமையான சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு ஏற்பட இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here