Home தமிழ்நாடு சொந்த செலவில் தூர்வாரும் கண்மாயை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்

சொந்த செலவில் தூர்வாரும் கண்மாயை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்

135
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

பெரியகுளம் அருகே பாப்பிபட்டி கண்மாய் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் உள்ள பாப்பிபட்டி கண்மாய் முழுவதும் புதர்கள் மண்டி காணப்பட்டது. இதனால் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்‌ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் தங்களது சொந்த செலவில் தூர்வார நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து பாப்பிபட்டி அணை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது கண்மாய் அருகே மரக்கன்று நடும் பணியையும் துணை முதலமைச்சர் தொடக்கி வைத்தார்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here