Home தமிழ்நாடு திருநங்கையை கல்யாணம் செய்த இளைஞர்! எதற்காகனு தெரியுமா??

திருநங்கையை கல்யாணம் செய்த இளைஞர்! எதற்காகனு தெரியுமா??

501
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

கடலூர் மாவட்டம், திருவந்திபுரம் சாலைக்கரையைச் சேர்ந்த சேகர்-அமுதா தம்பதியின் மகள் அமிர்தா. இவர் திருநங்கை, பி.எஸ்ஸி வரை படித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் லட்சுமண்.

இவர் மும்பையில் சினிமா ஷூட்டிங்களுக்கு செட் அமைக்கும் பணியில் தொழிலாளராகப் பணிபுரிந்துவருகிறார். ஃபேஸ்புக் மூலம் அமிர்தாவும் லட்சுமணனும் நட்பாகப் பழகிவந்துள்ளனர்.பின்னர் அது காதலகா மாறியது

இது குறித்து மணமகன் லட்சுமண் கூறுகையில், “நாங்க ஒரு வருடமாக காதலித்துவந்தோம். என் பெற்றோரிடம் கூறியபோது ஆரம்பத்தில் எதிர்த்தனர்.

பின்னர் அவர்களைச் சமாதானப்படுத்தி,எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயிலில் நடத்த முடிவுசெய்தோம். ஆனால், அதற்கு எதிர்ப்பு இருந்தது. கோயில் அலுவலர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கொடுத்து அனுமதி வாங்கி இன்று கோயிலில் திருமணம் செய்துகொண்டோம்” என்றார். இனி நான் மும்பை செல்லப் போவதில்லை. திருவந்திபுரத்தில் அமிர்தாவுடன் வசிக்கப் போகிறேன்” என்றார்.

இது குறித்து அமிர்தா கூறுகையில், “நான் பி.எஸ்ஸி வரை படித்துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குப் படித்து வருகிறேன். போலீஸ் வேலைக்கும் முயற்சி செய்துவருகிறேன்.

நான் கடந்த இரண்டு வருடமாக மும்பையில் இருந்தேன்.அப்பொழுது ஃபேஸ்புக் மூலம் எனக்கும், மும்பையைச் சேர்ந்த லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.இருவரும் நட்பாகப் பழகினோம்.

எங்கள் நட்பு காதலாக மாறியது.கடந்த ஒரு வருடமாக காதலித்துவந்தோம். இது குறித்து திருவந்திபுரத்தில் உள்ள என் பெற்றோருக்குத் தெரிவித்தேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here