Home சினிமா இதனால் தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.! முதன் முறையாக மனம் திறந்த நயன்.!

இதனால் தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.! முதன் முறையாக மனம் திறந்த நயன்.!

214
0

Mobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ  கண்டறியும் App!! Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்

தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார். மேலும், தென்னிந்திய திரை உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் என்று சொல்லப்பட்டு வருகின்றன.

சில வருடங்களாகவே நயன்தாரா நடிப்பில் திரைக்கு வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாக இருந்தது. அதை தொடர்ந்து தளபதி விஜய்யின் 63 வது படமான பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.மேலும், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக முடிவடைந்தது.பொதுவாகவே நயன்தாரா தான் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கும் , எந்த ஒரு விழாவிற்கும் வர மாட்டார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது

பிரபலமான நடிகர், பிரபலமான இயக்குனர், பெரிய கம்பெனி ஆக கூட இருந்தாலும் புரமோஷனுக்கு வந்து கலந்துகொள்ளவும் மாட்டார்.அவர் எந்த ஒரு பேட்டியும் கூட தருவதில்லை.அதுவும் அபூர்வமாக ‘பூக்கும் காளான்’ போல அவருக்கே தோன்றினால் மட்டும் டிவியில் கலந்து கொண்டு பேட்டி அளிப்பார்.

நயன்தாராவை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போதே அவர் கண்டிப்புடன் சொல்லிடுவார். என்னை எந்த ஒரு புரமோஷனுக்கு, விழாவிற்கு வற்புறுத்தக்கூடாது என்றும் , இந்த கண்டிஷனுக்கு சரி என்றால் தான் அவர் படத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று திரையுலகத்தில் பேசப்பட்டு வருகின்றன.

இருப்பினும் ,பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அதை தொடர்ந்து,வரும் ஹைதராபாத்தில் “சைரா ” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போதும் அந்த விழாவில் நயன்தாரா கலந்து கொள்வாரா? என பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.

மேலும், பிரம்மாண்டமான படம், பிரபலமான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர் என்பதனால் நயன்தாரா கண்டிப்பாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர். சொன்ன மாதிரி பிகிலுக்கு பாய் சொன்னது போல,சைராவுக்கு டாடா சொல்லிவிட்டார் நயன் .

பிரம்மாண்டமான செலவில் சிரஞ்சீவி நடித்துள்ள “சைர நரசிம ரெடி” படம் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு திரைக்கு வந்தது. இந்த படத்தில் அமிதாப்பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா ஆகிய பல பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

நயன்தாரா ஏன் இது போல எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை என்று ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த நிலையில் இதற்கான காரணத்தை முதன் முறையாக கூறியுள்ளார் நயன், நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் தெரிந்துகொள்ள வேண்டாம் என நினைக்கிறேன்.

நான் தனிமையை விரும்பும் ஒருவர். கூட்டம் என்றால் எனக்கு சமாளிப்பது கடினம். பல சமயங்களில் நான் பேசியதை தவறாக மாற்றி சித்தரித்துவிடுகிறார்கள். அதனால் வரும் சிக்கல்களை சமாளிப்பது கடினமாக உள்ளது. என்னுடைய வேலை நடிப்பது மட்டும் தான். மாற்றதை என் படங்களே பேசும், இவ்வாறு பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார் நயன்.

நயனதாரா இது போல பட விழாவிற்கு வராமல் இருப்பதால் இவரை லேடி அஜித் என்று கூறி வருகின்றனர். தற்போது நயன்தாரா இப்படி கூறியுள்ளது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பும் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க நயன்தாரா தற்போது பிகில் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு சூப்பர் ஸ்டாருடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

எனவே, பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வராதா நயன்தாரா, கண்டிப்பாக தர்பார் படத்தின் எந்த விழாவிற்கும் வர மாட்டார் என்று ஆணித்தனாக நம்பப்படுகிறது. மேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here